அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அனுமதி

அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அனுமதி

அடுத்த ஆண்டு ஜூலை வரை ஃபேஸ்புக் ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோஷியல்மீடியா ஜாம்பவான் ஆன ஃபேஸ்புக் கொரோனா காலத்தில் தன்னுடைய

அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அனுமதி

ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. இதை அடுத்த ஆண்டு ஜூலை வரை நீட்டிப்பதாக தற்போது அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அலுவலக பணித் தேவைக்காக 1000ம் டாலர் கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அனுமதி
கடந்த வாரம்தான் கூகுள் நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்றும் அனுமதியை வழங்கியது. அதைப் பின்பற்றி தற்போது ஃபேஸ்புக் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் தன்னுடைய பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் மாற்றம் கொண்டுவர ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அனுமதி
சில தினங்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் நிறுவனம் மான்ஹாட்டன் நகரில் தன்னுடைய புதிய அலுவலகத்தை திறக்க 7.3 லட்சம் சதுர அடி பரப்பு இடத்தை குத்தகைக்கு பெற்றுள்ளது. இந்த அலுவலகம் தயாராக அடுத்த ஆண்டு இறுதி ஆகிவிடும் என்று கூறப்படும் நிலையில், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் அனுமதியை அது வழங்கியுள்ளது.