’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ – டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

 

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ – டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

அதிபர் டிரம்பை தங்களது சமூக வலைதளங்களை உபயோகப்படுத்த அனுமதித்தால் அமெரிக்காவின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்கள் அரங்கேறலாம் என்பதால் அவரது கணக்குகளைக் காலவரையின்றி முடக்குவதக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வன்முறை அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டமான கேபிட்டலில் அரங்கேறியது. அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு அதிகாரத்தை மாற்றும் வேளையில் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்திக் காட்டினர் டிரம்பின் ஆதரவாளர்கள்.

அதிகார மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு எலெக்டரல் வாக்குகளுக்கு உண்டு. அதனை அறிந்துகொண்டு எப்படியாவது அந்த வாக்குகளை எண்ணவிடக் கூடாது என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. இருப்பினும், அவர்களைத் தடுத்து பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் அதிகாரப்பூர்வ அதிபரானார்.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ – டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

வரலாறு கண்டிராத இந்த வன்முறைக்கு விதை போட்டது சாட்சாத் டிரம்ப் மட்டுமே. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத அவர் தொடர்ந்து பைடனின் வெற்றி முறைகேடாக நிகழ்ந்தது என்று கூறிவந்தார். அதுமட்டுமில்லாமல் வழக்குகளையும் தொடர்ந்தார். ஆதாரமற்ற வழக்குகள் என்று நீதிமன்றம் ரிஜக்ட் செய்தது டிரம்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதரவாளர்களைத் தூபம் போட்டு எரிய வைத்தார். அதன் உச்சக்கட்டமாகத் தான் ஜனவரி 6ஆம் தேதி அட்டூழியங்கள் நிகழ்த்த காரணமாக அமைந்தது.

இதனை நிறுத்துவதற்குப் பெயரளவில் ஒரு வீடியோவை டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டார். ஆனால் அதிலும் பைடன் வெற்றி முறைகேடானது என்று கூற அவர் மறக்கவில்லை. மேலும் தனக்காகப் போராடும் (அவரைப் பொறுத்தவரை அது போராட்டம்) ஆதரவாளர்களைச் சிறந்தவர்கள் என்றும் கூறியிருந்தார்.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ – டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

வன்முறையைத் தடுக்க போடப்பட்ட வீடியோ போல் இல்லாமல் அதனை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் டிரம்ப் பதிவிட்டதாக ட்விட்டர் அந்த வீடியோவை உடனடியாக நீக்கியது. அவரது கணக்கையும் முடக்கியது. தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் டிரம்பின் கணக்கை முடக்கியது.

இச்சூழலில் அமெரிக்காவில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு காலவரையின்றி டிரம்பின் கணக்கை முடக்கிவைப்பதாக நேற்று முன்தினம் (ஜனவரி 7) பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ – டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

அந்தப் பதிவில், “கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் பார்த்தால், அதிபராக மீதமிருக்கும் நாட்களை டிரம்ப் முறையாகப் பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பைடனுக்கு அமைதியான முறையில் அதிகாரம் மாற்றம் செய்யாமல் தவறான அணுகுமுறை அவர் கையாள்கிறார்.

ஆதரவாளர்களின் செயல்களைக் கண்டிக்காமல், மாறாக அதனைத் தூண்டிவிடும் விதமாக எங்களது சமூக வலைதளங்களில் அவர் பதிவுகளை இட்டார். இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் பதிவுகள் வன்முறையைத் தீவிரமாக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து நீக்கிவிட்டோம்.

தற்போது நடைபெறும் பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கும் நடைமுறையும் இன்னும் 13 நாட்களில் நிகழவிருக்கும் (ஜனவரி 20) பதவியேற்பும் அமைதியாக நடைபெற வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவசியமானது அதுவே.

கடந்த காலங்களில் எங்களின் விதிகளுக்கேற்ப அதிபர் டிரம்பை எங்களது தளத்தை உபயோகிக்க அனுமதித்தோம். இருப்பினும், விதிகளை மீறி அவர் இட்ட பதிவுகளை நீக்கியிருக்கிறோம் அல்லது வன்முறையைத் தூண்டுகிறது என்று லேபிள் செய்திருக்கிறோம்.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ – டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

இதைச் செய்ததற்கு ஒரேயொரு காரணம் தான். அரசியல்வாதிகளின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்கு நாட்டு மக்களுக்கு தார்மீக உரிமை இருப்பதால் நாங்கள் அனுமதித்தோம். ஆனால் இப்போதைய சூழல் முற்றிலும் மாறாக இருக்கிறது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றுவதற்கு சட்டத்திற்குப் புறம்பான வன்முறையைத் தூண்டும் விதமான பதிவுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த நேரத்தில் டிரம்பை எங்களது தளங்களை உபயோகிக்க வைத்தால் நாட்டின் அமைதி கேள்விக்குறியாகும் என்பதை நாங்கள் தீர்மானித்தோம்.

எனவே அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை கால வரையின்றி முடக்குகிறோம். அதிகார மாற்றம் முறைப்படி நடைபெற்று, பதவியேற்பு முடியும் வரையிலான இரு வாரங்கள் வரை அவரது கணக்கை நாங்கள் முடக்கிவைத்திருப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.