’பட்டுத் துணியில் ஃபேஸ் மாஸ்க்’ காதியின் கிஃப்ட் பாக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா காலம் உலகின் நடவடிக்கையையே மாற்றிவிட்டது. வெளியில் செல்லும்போது முக கவசம் அவசியம் என மருத்துவரால் வலியுறுத்தப்படுகிறது. சில மாவட்டங்களில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கவும் படுகிறது.

பலர் தங்கள் உடைக்கு ஏற்றவாறு முக கவசத்தை அணிந்துகொள்கிறார்கள். சிலர் கல்யாணத்திற்கு என்று ஸ்பெஷலாக முக கவசம் தயாரித்துக்கொள்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் அறிவுறுத்தும் முக கவசமே கொரோனா பரவலைத் தடுக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அரசு நிறுவனமான ’காதி’ பட்டில் முக கவசம் தயார் செய்துள்ளது. அதை பரிசுப் பெட்டியாகக் கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத்தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள பரிசுப் பெட்டியில் பல்வேறு வண்ணங்கள், அச்சுக்களுடன் கூடிய கைவேலைப்பாடு கொண்ட 4 பட்டு முகக் கவசங்கள் இருக்கும். கருப்பு வண்ணத்தில், பொன்னிறத்தில் அச்சிடப்பட்ட, கைகளால் தயாரிக்கப்பட்ட கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காகிதப் பெட்டிக்குள் இந்த முகக் கவசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேசமயம், விழாக்கால உணர்வைக் கொண்டாடும் வகையிலான தகுந்த ஒரு பொருளாக இந்தப் பரிசுப்பெட்டி உள்ளது என்று  அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டினார்.

பட்டு முகக்கவசங்கள் கொண்ட இந்தப் பரிசுப்பெட்டியின் விலை 500 ரூபாய். தில்லி என் சி ஆர் பகுதியில் உள்ள காதி கிராமத் தொழில் துறை ஆணையத்தின் அனைத்து கடைகளிலும் இந்தப் பரிசுப் பெட்டிகள் கிடைக்கும்.

அச்சிடப்பட்ட பட்டு முகக்கவசம் ஒன்றும், கவர்ச்சிகரமான கண்கவர் வண்ணங்களில் மூன்று பட்டு முகக்கவசங்களும் பரிசுப்பெட்டியில் இருக்கும். மூன்று அடுக்குகள் கொண்ட இந்தப் பட்டு முகக் கவசங்கள், தோலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், துவைக்கக் கூடியதாகவும், மறு பயன்பாடு கொண்டதாகவும், தானாகவே மக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இந்த முகக் கவசங்களில் மூன்று மடிப்புகள் உள்ளன. காதுகளில் பொருத்திக் கொள்வதற்கு வசதியாக, காதுகளுக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளக்கூடிய கண்ணிகளைக் கொண்டவை. அழகான மணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த முகக்கவசங்களில் 100 சதவீதம் காதி பருத்தி துணி கொண்ட இரண்டு உள் அடுக்குகளும், பட்டுத்துணியால் அழகுற செய்யப்பட்டுள்ள மேலடுக்கு ஒன்றும் இருக்கும்.

Most Popular

“நடுவுல அழகி ,லெப்ட்ல மானேஜர் ,ரைட்ல சர்வர் “-தாய்லாந்து நாட்டு பெண்ணை கட்டிலில் கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள்..

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஒரு தாய் லாந்துநாட்டு அழகி கொரானா காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த நாட்டுக்கு திரும்பி போக முடியாமல்...

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29)...

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள்...

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...