உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

உளுந்தூர்பேட்டையில் அமையவுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி .

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இந்தக் கோவிலைப் போல பல இடங்களில் ஏழுமலையான் கோவில் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுவிட்டது.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

இந்த சூழலில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான 4 ஏக்கர் நிலத்தினை உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு வழங்கினார்.அத்துடன் அதற்கான ஆவணத்தை தேவஸ்தான அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு ஒப்படைத்தார்.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண உற்சவம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலை வகிக்க, அமைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

சுமார் 50ற்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்திய நிலையில் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு.