40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சுமார் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால் பல ஏரிகள், ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு 222 கிமீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்று கடலில் கடக்கிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்நிலையில் பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெரும்பாக்கம், முசரவாக்கம், விஷார், செவிலி மேடு, தேனம்பாக்கம், விப்பேடு, வாலாஜாபாத், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.