சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 6 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொதுமுடக்க பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தேதிவரை என அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முடிந்தவரை இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Most Popular

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே நன்கொடையாக ரூ.41 கோடி குவிந்தது..

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 நவம்பர் 9ம் தேதியன்று அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டி கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ராமர் கோயில் கட்டுமான...