செமஸ்டர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வுகளை செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்.29ம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழகம் நீடித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை செப்.5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த சூழலில், அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செமஸ்டர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

இதனை எதிர்த்து மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பயன்படுத்தாத லேப் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் செலுத்த சொல்லி கல்லூரி வற்புறுத்துவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விசாரணையில், செமெஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்.19 வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக அண்ணா பல்கலை. தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அக்.9 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

செமஸ்டர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

இந்த நிலையில், அக்டோபர் 29 வரை கல்விக் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்குவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 3 ஆவது முறையாக தற்போது செமஸ்டர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.