தமிழக பொருளாதாரத்தை மீட்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழக பொருளாதாரத்தை மீட்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தமிழக பொருளாதாரத்தை மீட்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வட இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பல தொழில்கள் தொடங்க முடியாத நிலையில் உள்ளது.

தமிழக பொருளாதாரத்தை மீட்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை கடந்த மே மாதம் 9ம் தேதி தமிழக அரசு நியமித்தது. மூன்று மாதங்களில் இந்த குழு தன்னுடைய பரிந்துரையை வழங்க வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24 பேர் இடம் பெற்றிருந்தனர்.

தமிழக பொருளாதாரத்தை மீட்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
இந்த குழுவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால், இந்த குழு தன்னுடைய பணிகளை இன்னும் முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குழு நியமித்த துணைக் குழுக்கள் தங்கள் அறிக்கையை அளித்துவிட்டன. இதனை உயர்மட்ட குழு பரிசீலனை செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. எனவே, இந்த உயர் மட்ட குழுவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.