தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு!

 

தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு!

16வது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் அலுவல்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தனி அலுவலர்கள் பதவி காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு!

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்த மனுவில், அரசு இயந்திரம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக மக்களுக்கு உண்டாகி உள்ள துன்பத்தை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பு பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு!

அத்துடன் மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை திட்டமிட தனி அலுவலர்களின் பதவி காலத்தை 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அவர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிகள் அமைக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.