கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

 

கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் இலகுரக வாகனம், மத்திய ரக வாகனம் ,கனரக வாகனம் என மூன்று வகை உண்டு. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகன பதிவு கட்டணம் 300 ரூபாயாக உள்ளது. அதே சமயம் 7000 முதல் 12,000 கிலோ வரை உள்ள மத்திய ரக வாகனங்கள் பதிவு கட்டணம் 400 ரூபாய், 12 ஆயிரம் கிலோ அதிகமாக உள்ள வாகனங்களை தான் கனரக வாகனங்கள் என்று சொல்கிறோம்.

கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

இந்த அனைத்து வாகனங்களுக்கும் மோட்டார் வாகன சட்டப்படி பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி என விதி அமலில் இருந்த நிலையில் இது கடந்த 2019ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கல்வித்தகுதி தடை இல்லை என தெரிவிக்கப்பட்டது . அதேசமயம் 20 வயதை எட்டியவர்கள் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமையை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும் போது, ஒளி விளக்கு, பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களும் மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் புதுப்பிக்க மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.ஜூன் 30 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடியவிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.