தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3 மாதகாலம் தமிழக அரசு நீட்டித்தது. கொரோனா காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாகச் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என அரசு வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில் இந்த பதவி நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Most Popular

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...

கேரளாவில் விமான விபத்து : அவரச உதவி எண்கள் அறிவிப்பு!

துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது நேற்று விபத்திற்குள்ளானது. 191 பேர் பயணித்த இந்த விமான விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 17...

கேரள விமான விபத்தில் 20 பேர் மரணம்: 2 விமானிகளும் உயிரிழப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து இந்தியர்களை கேரளா அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி...