மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் ஏற்றுமதி உயர்வு ஆர்வம் காட்டும் அமெரிக்கா – வாரியம் தகவல்

மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் ஏற்றுமதி உயர்வு ஆர்வம் காட்டும் அமெரிக்கா – வாரியம் தகவல்

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மசாலா பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் ஏற்றுமதி உயர்வு ஆர்வம் காட்டும் அமெரிக்கா – வாரியம் தகவல்

இதுகுறித்து மசாலா பொருட்கள் வாரியத்தின் செயலாளர் சத்தியன் கூறுகையில், இஞ்சி, மஞ்சள், மல்லி மற்றும் சீரகம் ஆகிய பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இத்தகைய பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது என்றார். மேலும் வங்கதேசம், ஈரான், மொராக்கோ, மலேசியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் மசாலா பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் ஏற்றுமதி உயர்வு ஆர்வம் காட்டும் அமெரிக்கா – வாரியம் தகவல்

உலகளவில் மசாலா பொருட்களுக்கான ஏற்றுமதியில் முன்னணி நாடாக உள்ள இந்தியா, மசாலா பொருட்கள் ஏற்றுமதியில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக 2019-2020ம் நிதியாண்டில், இஞ்சி ஏற்றுமதி மட்டும், அளவுகளின் அடிப்படையில் 178 சதவீதம் கூடுதலாகவும், பண மதிப்பின் அடிப்படையில் 129 சதவீத கூடுதல் வருமானத்தையும் பெற்றுத்தந்தது என்பது அந்த வாரியத்தின் தகவலில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் ஏற்றுமதி உயர்வு ஆர்வம் காட்டும் அமெரிக்கா – வாரியம் தகவல்

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பலரும் இயற்கையான பொருட்களை விரும்பி அதிக அளவில் உட்கொள்வதே இந்திய மசாலா பொருட்கள் ஏற்றுமதி தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

S. முத்துக்குமார்.