செப்டம்பரில் முக்கிய பொருட்கள் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு

செப்டம்பரில் முக்கிய பொருட்கள் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு

பெட்ரோலியம் மற்றும் நகை மற்றும் ஆபரண கற்கள் அல்லாத பிற முக்கிய பொருட்களின் ஏற்றுமதி செப்டம்பரில் 2110 கோடி டாலர் என்றளவில் 11.1 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

செப்டம்பரில் முக்கிய பொருட்கள் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு

மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் முன்கூட்டிய மதிப்பீடுகளின் முடிவில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெட்ரோலியம் மற்றும் ஆபரண நகை மற்றும் ஜெம்ஸ் ஏற்றுமதி தவிர்த்து பிற முக்கிய பொருட்களின் ஏற்றுமதி, செப்டம்பரில் 2110 கோடி டாலர் என்றளவில் 11.1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாத த்தில் 3.2 சதவீத வீழ்ச்சியை சந்தித்து இருந்தது என்பது நினைவுக்கூரத்தக்கது.

செப்டம்பரில் முக்கிய பொருட்கள் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு

இந்த தகவலின் மூலம், நாட்டின் ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சிபாதைக்கு திரும்பி உள்ளதை தெரிந்துகொள்ள முடிகிறது. இது ஒருபுறமிருக்க ஆபரண நகை மற்றும் ஜெம்ஸ் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் நிலவும் பொதுமுடக்கம் மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த தால், அந்த துறை கடும் பாதிப்பை கண்டு, அதன் எதிரொலியாக அதன் ஏற்றுமதி கடும் பாதிப்பை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பரில் முக்கிய பொருட்கள் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு
  • எஸ். முத்துக்குமார்