Home இந்தியா ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..

ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..

கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் ஒருவரிடம் காசு கொடுத்து தன்னை புகழ்ந்து பேச சொல்லியதும் ,கௌண்டமணி அவரிடம் ‘நீ வாங்குற அஞ்சி,பத்துக்கு இதெல்லாம் தேவையா?” என்று பேசுவார் .அதை போல இன்று சோசியல் மீடியாவில் பல பிரபலங்கள் தங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்வதாக காமிக்க இதற்கென செயல்படும் சில போலியான வெப்சைட்டில் பணம் கொடுத்து போலியான நபர்களை விலைக்கு வாங்கிய விவகாரம் இப்போது பாலிவுட்டை உலுக்கி வருகிறது .

இப்போது போலி சமூக ஊடகங்களைப் பின்தொடர்பவர்களை(followers ) விற்பனை செய்யும் சுமார் 100 நிறுவனங்களை சைபர் கிரைம் கண்டறிந்தது. போலி பின்தொடர்பவர்களை(followers ) விற்கும் 68 நிறுவனங்களையும், மறு ட்வீட், லைக்குகள், சந்தாக்கள், கருத்துகள் போன்ற போலி சமூக ஊடக நடவடிக்கைகளையும் இப்போது சைபர் க்ரைம் அடையாளம் கண்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக பாலிவுட் பின்னணி பாடகி பூமி திரிவேதியின் போலி சுயவிவரத்தை உருவாக்கிய ஒருவரை கடந்த வாரம் மும்பை போலீசார் கைது செய்தனர் .இந்த போலி சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள் (followers )வழக்கில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரை மும்பை போலீசார் விசாரிக்க வாய்ப்புள்ளது.

போலி பின்தொடர்பவர்களைக்(followers ) கொண்ட முதல் 10 பிரபலங்களில் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் அடங்குவதாக பல்வேறு பிரபலமான அமைப்புகளால் பல்வேறு ஆய்வுகள் உள்ளன என்பதை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Most Popular

ரஷ்ய கொரொனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 24 லட்சத்து  41 ஆயிரத்து 738 பேர்.     கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு...

அக்டோபர் 1 முதல் 10,11,12 மாணவர்கள் பள்ளிகள் செல்ல அனுமதி ஏன்? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நாகதேவன்பாளையம், சிறுவலூர் ஊராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் சிறுவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கன்று வளர்ப்பு...

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது! அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம்...

எஸ்.பி.பி. நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் தாமரைப்பாக்கம் பண்ணைவீடு

பாடகர் எஸ். பி. பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பண்ணை வீட்டில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Do NOT follow this link or you will be banned from the site!