இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி.. நிபுணர் குழு பரிந்துரை!

 

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி.. நிபுணர் குழு பரிந்துரை!

உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிராக குறுகிய காலகட்டத்திலேயே இந்தியா 2 தடுப்பூசிகளை கண்டுபிடித்து சாதனை படைத்தது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய அந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்தப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி.. நிபுணர் குழு பரிந்துரை!

இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த தடுப்பூசியை ஆய்வு செய்து வரும் ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. அதனை ஆய்வு செய்த நிபுணர் குழு, தற்போது மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, 3ஆவது தடுப்பூசியாக ஸ்புட்னிக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி.. நிபுணர் குழு பரிந்துரை!

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆமை வேகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இத்தகைய சூழலில், ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அந்த தடுப்பூசி 91.6% செயல்திறன் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.