இந்தியா டுடே வெளியிட்ட EXIT POLLS முடிவுகள்

 

இந்தியா டுடே வெளியிட்ட EXIT POLLS முடிவுகள்

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ம் தேதியே வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், மேற்கு வங்க தேர்தல் 8 கட்டமாக நடைபெற்றதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கத்தின் 8வது கட்ட தேர்தல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றதால். இன்று இரவு 7 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா டுடே வெளியிட்ட EXIT POLLS முடிவுகள்

ஆக்சிஸ் மை இந்தியாவுடன் இணைந்து இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திமுக கூட்டணிக்கு 175 முதல் 195 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 38 முதல் 54 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும், மற்ற கட்சிகள் 1 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அம்முடிவுகள் தெரிவிக்கின்றன.

நியூஸ் -24 மற்றும் டுடே சாணக்யா இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளும், ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும், திமுக கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்றும் தெரிவிக்கின்றன.

India Today Exit Polls

DMK – 175-195
48%

AIADMK – 38-54
38%

MNM -0-2
4%

AMMK – 1-2
3%