மாற்றத்தை விரும்பும் மக்கள்!அதிமுகவின் வெற்றி நடைக்கு தடை போட்ட அமமுக!!

 

மாற்றத்தை விரும்பும் மக்கள்!அதிமுகவின் வெற்றி நடைக்கு தடை போட்ட அமமுக!!

சிவோட்டர்ஸ், சிஎன்எக்ஸ் ஏபிபி, ரிபப்ளிக் உள்ளிட்ட அனைத்து கருத்துகணிப்பிலும் திமுகவே வெற்றிப்பெறும் என அடித்து சொல்கிறது. ஆனால் கிராம புறங்களில் அதிமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக எதிர்பார்க்கப்பட்டே உள்ளது. இருப்பினும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என என ஆராய்ந்த போது, பாஜகவுடன் அதிமுக கைக்கோர்த்ததே காரணம் என சொல்லப்பட்டது.

மாற்றத்தை விரும்பும் மக்கள்!அதிமுகவின் வெற்றி நடைக்கு தடை போட்ட அமமுக!!

170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய டுடே சாணக்ய கருத்துக்கணிப்பின்படி, திமுகவுக்கு 51% வாக்குகள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 35.5%, அமமுக 6.4%, மக்கள் நீதி மய்யத்துக்கு 3.63% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தேமுதிகவின் கூட்டணியை துண்டித்ததும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என 65% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.