தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… உத்தர பிரதேசத்தில் 7ல் 6 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்

 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… உத்தர பிரதேசத்தில் 7ல் 6 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்

உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், 7ல் 6 சட்டப்பேரவை தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வந்தன. மேலும் ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் யோகி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் அம்மாநிலத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… உத்தர பிரதேசத்தில் 7ல் 6 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்
முதல்வர் யோகி ஆதித்யநாத்

பா.ஜ.க. சார்பில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் இடைத்தேர்தல் நடந்த 7 தொகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதேசமயம், சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்தன. ஹத்ராஸ் சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளின் முடிவுகள் வேறுவிதமாக உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… உத்தர பிரதேசத்தில் 7ல் 6 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்
காங்கிரஸ்

முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பின்படி, உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 7 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 5 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமாஜ்வாடி 1 முதல் 2 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் 1 தொகுதியையும் கைப்பற்றலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகள் நிஜமானால், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. 37 சதவீத வாக்கு வங்கியுடன் வலுவாக இருக்கும். அதேசமயம் காங்கிரஸ் வாக்கு பங்கு 8 சதவீதமாக இருக்கும். சமாஜ்வாடி தனது 27 சதவீத வாக்கு பங்கை தக்கவைத்து கொள்ளும். மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனது 20 சதவீத வாக்கு பங்கை நழுவ விடாது என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.