விவசாயி திருமண விழாவில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை மரம் செடிகளின் கண்காட்சி

விவசாயி திருமண விழாவில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை மரம் செடிகளின் கண்காட்சி

விவசாயி இல்ல திருமண விழாவில் 200 வகை பழமை வாய்ந்த மரங்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தொடக்கி வைத்தார்

விவசாயி திருமண விழாவில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை மரம் செடிகளின் கண்காட்சி

காவேரி டெல்டா விவசாய சங்கங்களின் பொதுச் செயலாளர் காவிரி தனபால் மகள் திருமண விழா நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடைபெற்றது. சமூக இடைவெளியை பின்பற்றி முகம் அணிந்தவாறு நடைபெற்ற திருமண விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயி திருமண விழாவில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை மரம் செடிகளின் கண்காட்சி

முன்னதாக திருமண மண்டபத்தின் முன்பாக அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரியவகை மரம் செடிகளின் கண்காட்சிகள் அவற்றின் காலங்கள் பயன்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இம்மர கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். கண்காட்சியில் மனோரஞ்சிதம், நறுவல்லி ,நீர்மருது, திருவாச்சி ,மந்தாரை, மஞ்சள் கடம்பு செங்கொன்றை , எட்டி, செங்கருங்காலி நாகலிங்கம் வன்னி மரம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வகையான பழங்காலத்து மரக்கன்றுகள் கண்காட்சியில் இடம் பெற்றன இது திருமணத்திற்கு வந்திருந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

விவசாயி திருமண விழாவில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை மரம் செடிகளின் கண்காட்சி