8 வயது சிறுவனுக்கு மரணதண்டனை.. இது மனிதத்தன்மையா? இதற்கு கண்டனம் கிடையாதா?

 

8 வயது சிறுவனுக்கு மரணதண்டனை.. இது மனிதத்தன்மையா? இதற்கு கண்டனம் கிடையாதா?

பாகிஸ்தானில் இந்து கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. காரணம் 8 வயது பச்சியும் பாலன் இந்து சிறுவன் மதரசா அருகில் சிறுநீர் கழித்தானாம். இதற்கு மரண தண்டனையாம். இது மனிதத்தன்மையா? இதற்கு கண்டனம் கிடையாதா? என்று கேட்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

8 வயது சிறுவனுக்கு மரணதண்டனை.. இது மனிதத்தன்மையா? இதற்கு கண்டனம் கிடையாதா?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரஹீம் யார் கான் மாவட்டத்திலிருக்கும் போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் உள்ளன. அந்த பகுதியில் மதராசா நூலகம் உள்ளது. அந்த நூலகத்தில் இஸ்லாம் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்பளத்தின் மீது 8 வயது சிறுவன் வேண்டுமென்றே சிறுநீர் கழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்தச் சிறுவனை கைது செய்து அழைத்து விசாரித்த போலீசார், மைனர் என்பதால் சிறுவனை ஜாமீனில் விடுவித்தனர்.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வழக்கம். அந்த சிறுவனும் அதற்கு நிகரான குற்றம் செய்து இருப்பதால் அவனுக்கு மரண தண்டனை வழங்காமல் ஜாமீன் வழங்கி விட்டதாக இஸ்லாம் மதத்தினர் கொந்தளித்தனர். இதனால், தங்களது ஆவேசத்தை காட்டினர். போங்க் நகரில் இருந்த இந்து கோவில் அடித்து நொறுக்கி தீ வைத்து எரிக்கப்பட்டது . தகவல் அறிந்து போலீசார் வந்து கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

8 வயது சிறுவனுக்கு மரணதண்டனை.. இது மனிதத்தன்மையா? இதற்கு கண்டனம் கிடையாதா?

சிறுநீர் கழித்த சிறுவனுக்கு மரண தண்டனை வழங்காமல் ஜாமீன் அளிக்கப்பட்டதால் கொந்தளித்துப் போனவர்கள் இந்துக் கோயிலை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்த வீடியோ இணையங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுவனுக்கு மரணதண்டனை கொடுத்தே ஆகவேண்டுமென்று சொல்லப்பட்டு வருவதால், சிறுவனும் குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டனர். இதுமாதிரியான மோசமான சூழலில் பயந்து பயந்து வாழ முடியாது என்று100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டன.

சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக ஒருவாரம் சிறையில் இருந்தான். தான் என்ன செய்தோம் என்பதை அறியாமல் அவன் இருந்தான். சிறுவனுக்கு நேர்ந்த நிலை எண்ணி ஒட்டுமொத்த இந்து சமூகமும் பயந்து நிற்கிறது. கடைகளை திறக்கவில்லை. பாதுகாப்பிற்கு வேலைகளை விட்டுவிட்டோம். நாங்கள் அந்த பகுதிக்கு திரும்ப ல்லை என்கின்றனர் அப்பகுதியில், வசித்த மக்கள்.

8 வயது சிறுவனுக்கு மரணதண்டனை.. இது மனிதத்தன்மையா? இதற்கு கண்டனம் கிடையாதா?

பாகிஸ்தான் இந்து கவின்சிலின் தலை வர் ரமேஷ்குமார், 8 வயது பையனுக்கு எதிரான தாக்குதல் என்னை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. தாக்குதலுக்கு அஞ்சி 100க்கும் மேலான இந்துக்கள் வீடுகளை காலி செய்துவிட்டார்கள்என்கிறார்.

இந்து ஆர்வலர் கபில்தேவ், சிறுவன் மிதான குற்றச்சாட்டுகளை உனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுதெரிவித்துள்ளார்.