#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

 

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆதி ராஜாராம் என்பவரை அதிமுக களமிறக்கியுள்ளது. தற்போது இவர் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் அமைப்பு செயலாளராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார். அப்போதே பயங்கர டஃப் கொடுத்திருக்கிறார். வெறும் 2, 468 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே ஸ்டாலினிடம் தோல்வியைத் தழுவினார். 1983ஆம் ஆண்டிலிருந்து அம்மாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். 32 வருட கால அரசியலில் தீவிர உழைப்பால் 28 வருடங்கள் பொறுப்பு வகித்திருக்கிறார். எப்போதும் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தவர் என்ற பெருமை ஆதிராஜாராமுக்கு உண்டு.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

2006ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பி பதவிக்காக இவரின் பெயரை ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அச்சமயம் வழக்கறிஞர் விஜயனைத் தாக்கிய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டதால் தாமாகவே முன்வந்து அந்தப் பதவியில் போட்டியிடவில்லை என்று கூறினார். ஜெயலலிதாவின் பெயரைக் காப்பாற்ற எம்பி பதவியைத் தூக்கியெறிந்ததால் அவரின் ஆசியைப் பெற்றவராக இருந்தார். பரபரப்பாகப் பிரச்சாரத்தில் இயங்கி கொண்டிருந்தவர் நமக்கும் சில நிமிடங்கள் ஒதுக்கி நேர்காணலில் பங்கேற்றார். நேர்காணலில் அவர் பேசியது பின்வருமாறு:

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

ஸ்டாலினின் கோட்டை என்று சொல்லக்கூடிய கொளத்தூரில் போட்டியிடுவது குறித்து?

என்னது கோட்டையா?… நிறைய ஓட்டை இருக்கு அதில் புகுந்து கோட்டைய பிடிச்சிருவோம். அவரது கோட்டை என்று சொல்வதே தவறு. இதேபோல் தான் ஆயிரம் விளக்கு அவரது கோட்டை என்றார்கள். நான் போட்டியிட்டு 2,400 வாக்கு வித்தியாசத்தில் தோற்றேன். அதனால் தான் அவர் அங்கிருந்து ஓடிவந்து கொளத்தூரை தேர்ந்தெடுத்தார். இல்லைனு சொல்ல முடியுமா?

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஏற்கெனவே போட்டியிட்டுள்ளீர்கள்? ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட அதிமுக தலைமை மறுபடியும் உங்களைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

ஸ்டாலினை எதிர்க்க முழுக்க முழுக்க நான் தகுதியானவன் என்பதால் தலைமை என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. 2006ஆம் ஆண்டு என்னுடைய சொந்த தொகுதியை விடுத்து ஜெயலலித என்னை ஆயிரம்விளக்கில் ஸ்டாலினை எதிர்த்து களமிறக்கினார். என்னுடைய மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் 100 சதவீத வெற்றி உறுதி.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

இருப்பினும் ஆயிரம் விளக்கில் போட்டியிட்டேன். அங்கேயும் எனக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் உட்கட்சி சதியின் காரணமாக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிட்டது. திமுகவுக்கான ஆதரவு அலை இருந்த சமயத்திலேயே போட்டியிட்டு நான் குறைந்த வாக்கில் தான் தோற்றேன். அதனால் தான் மீண்டும் தலைமை என்னை களமிறக்கியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்து விட்டார் என்று சொல்கிறார்களே?

அப்படியா… அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லையே. கொளத்தூர் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று பாருங்கள். தண்ணீர் பிரச்சினை, முறையான வடிகால் இல்லாமை, சுகாதார பிரச்சினைகள் இருப்பதை பார்ப்பீர்கள். அதிமுக அரசு எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது பொய். இதே துறைமுகம் தொகுதியில் திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு இருக்கிறார். அவருடைய தொகுதியையும் கொளத்தூரையும் கம்பேர் செய்து பாருங்கள். இருவருமே எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தானே. ஸ்டாலினுக்கு டோப்பா வைக்கிறதுக்கும்; பவுடர் பூசி கொள்வதற்கும் தான் டைம் இருக்கிறது.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுகிறீர்கள்? என்ன மாற்றாக மக்களிடம் முன்வைக்கிறீர்கள்?

மன்னிக்கவும்… ஸ்டாலின் தான் என்னை எதிர்த்து போட்டியிடுகிறார். நான் வைத்திருந்த திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துவிட்டார். ஆயிரம் விளக்கில் போட்டியிடும்போது தொகுதி மாணவர்களுக்கு கணினி வழங்க வாக்குறுதி கொடுத்தேன். அப்போதே ஜெயலலிதா என்னை அழைத்து இது எப்படி சாத்தியம் என்று கேட்டார். அதனுடைய தொடக்கம் தான் இப்போது 55 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியிருக்கிறோம்.

அதிமுகவின் வாக்கு வங்கியை அமமுக பிரிக்கும் பட்சத்தில் உங்களது வெற்றியைப் பாதிக்குமா?

என்னது அமமுக வாக்கு வங்கியா? அதிமுகவில் அங்கீகரிக்கப்படாதவர்கள் அவர்கள். ஒரு நபரின் பின்னால் சென்றால் நல்ல காசு பார்த்து செட்டிலாகிவிடலாம் என்பதால் இங்கிருந்து சிலர் அங்கு சென்றிருக்கிறார்கள். அதுதான் நடந்தும் இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் தினகரன். அப்படியிருக்கையில் அவரின் தொணர்கள் அமமுகவுக்கு வாக்களிப்பார்கள். ஆர்கே நகரில் தினகரன் வெற்றிபெற்றதற்குக் காரணமே திமுக செய்த சதி. திமுகவின் பி டீமாக இருந்து அமமுக அதிமுகவை தோற்கடித்தது.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சகாயம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சகாயத்தை நீங்கள் தான் பிரபலம், இளைஞர்களின் ஹீரோ என்றெல்லாம் சொல்லி கொள்கிறீர்கள். அவர் வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் தான் பிரபலமாக இருக்கிறார். அவரால் மாற்றம் உருவாகும் என்று கனவுலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. களத்தில் மக்களோடு மக்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.

நாம் தமிழர் சீமான், மக்கள் நீதி மய்யம் கமல் ஆகியோரால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக முடியவே முடியாது. சீமானைப் பற்றியும் சீமானின் கதைகள் பற்றியும் அனைவருக்குமே தெரியும். நல்ல கதை கேட்பவர்களுக்கு பிரபாகரன் கதைகளைக் கூறி அவர் பெயரில் லேகியம் விற்றுக் கொண்டிருக்கிறார்.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

நாம் தமிழர் போன்ற கட்சிகள் 50% பெண்களை வேட்பாளர்களாக அறிவிக்கும்போது திராவிடக் கட்சிகள் சமூகநீதியை முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

திராவிட இயக்கங்களின் உயிர்மூச்சு இடஒதுக்கீடு. இடஒதுக்கீடு தான் சமூக நீதி. 69% இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்து அதற்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்தது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயலலிதா தான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதை தடுப்பதே திராவிய இயக்கங்களின் நோக்கம். சீமான் எல்லாம் ஒரு ஆளாக முன்னிறுத்தாதீர்கள். நாம் தமிழர் கட்சியெல்லாம் ஒரு கட்சி என்கிறீர்கள். அது ஒரு பிளாக்மெயில் பார்ட்டி.

#EXCLUSIVE “ஸ்டாலினை ஓட ஓட விரட்டியவன் நான்” – கொளத்தூரில் சவால் விடும் ஆதி ராஜாராம்!

முதன்முதலில் அதிமுகவில் தான் பெண்களைப் பதவி கொண்டுவந்தவர் ஜெயலலிதா. மாவட்ட செயலாளர் ஒரு ஆண் என்றால் மாவட்ட கழக செயலாளரும் துணை செயலாளரும் பெண்கள் தான். ஏதோ ஒரு பைத்தியகாரன் (சீமான்) சொல்வதைக் கேட்டு அவனை முன்னிறுத்தி கேள்வி கேட்கிறீர்கள். பொழுதுபோக்குக்காக 234 தொகுதிகளிலும் யாரை வேண்டுமானாலும் நிறுத்தலாம். அதையெல்லாம் நியாயப்படுத்தி பேச முடியாது; கூடாது. பொய் பேசும் சீமானையெல்லாம் பெரிய அரசியல் சக்தியாகப் பார்ப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. 19 வருடமாக வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்று பேர்வழியை ஒரு தலைவனாக நீங்கள் முன்னிறுத்தக் கூடாது.

தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பாவம் அவர்களை விட்டுவிடுவோம். அண்ணன் விஜயகாந்த் ஆக்டிவா இருக்கும் வரையில் நல்ல கட்சியாகவே இருந்தது. இப்போது லெட்டர் பேட் கட்சியாகிவிட்டது. அவர்களிடம் செயல்படக் கூடிய தலைவர்கள் இல்லை. இப்படியிருக்கையில் அதிக சீட் கேட்பது, தோளில் ஏறி காதை கடிப்பது போன்றது. அவர்களின் தகுதிக்கேற்ப தான் சீட் கொடுக்க முடியும்.

குறைந்த வாக்கு வங்கி கொண்ட பாமக, பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதே?

அவர்களிடம் செயல்படக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள். வெற்றிக்காகப் பாடுபடுவார்கள். இதையெல்லாம் அறிந்து தான் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் அதிக சீட்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.