‘ஆடு மாமா… ஆடு மாமா’ அஷ்வின் மனைவின் உற்சாக ட்வீட்

 

‘ஆடு மாமா… ஆடு மாமா’ அஷ்வின் மனைவின் உற்சாக ட்வீட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள், டி20 போட்டித் தொடரை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடி வருகின்றன இரு அணிகளும்.

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேனா டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்துக்கொண்டன. ஐந்து நாட்களுக்கு முன் தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றுவிடும் என்று நினைத்த பலரையும் வாயடைக்க வைத்தனர் இந்திய வீரர்கள்.

‘ஆடு மாமா… ஆடு மாமா’ அஷ்வின் மனைவின் உற்சாக ட்வீட்

தங்கள் அற்புதமான, நிதானமான ஆட்டத்தால் இந்தப் போட்டியை ட்ராவக்கி விட்டனர். எனவே, இப்போது இந்தத் தொடர் இருவரும் சம நிலையில் இருக்கும் சூழலே நிலவுகிறது. மூன்றாம் டெஸ்ட் போட்டியில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் பேட்டிங்தான்.

இறுதியில் 5 விக்கெட்டுகல் கைவசம் இருந்தாலும், ஒரு ஓவரில் விக்கெட்டுகள் பறிபோகலாம் என்பதால் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்வதற்கான முயற்சிகளை விட, போட்டியைத் தோற்காமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தனர் இந்திய வீரர்கள்.

‘ஆடு மாமா… ஆடு மாமா’ அஷ்வின் மனைவின் உற்சாக ட்வீட்

விஹாரியும் பவுலர் அஷ்வினும் களத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பவுலிங்கை மாற்றிப் பார்த்தார்கள்… பீல்டிங்கில் மாற்றம் செய்து பார்த்தார்கள்… எந்தப் பயனும் இல்லை. இருவரின் பார்டனர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை.

விஹாரி 161 பந்துகளைச் சந்தித்து 23 ரன்களையும், அஷ்வின் 128 பந்துகளைச் சந்தித்து 39 ரன்களை மட்டுமே எடுத்தனர். ஆனால், இந்த நிதான ஆட்டம்தான் இந்தியாவுக்கு தோல்வியைத் தவிர்க்க வைத்தது. இவர்களின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் ரசித்தும் பாராட்டியும் சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

போட்டி நடந்துகொண்டிருந்தபோது அஷ்வினினி மனைவி ப்ரியா ‘ ஆடு மாமா… ஆடு மாமா” என்று உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார். அவரின் ட்விட்டை 450 மேற்பட்டோர் ரீ ட்விட் செய்து, ஏகப்பட்டோர் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.

விஹாரி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆட வில்லை. ஆனால், இந்தப் போட்டியில் ரன்கள் அதிகம் எடுக்க வில்லை என்றாலும், டெஸ்ட் போட்டிக்கே உரிய நிதானத்தையும் டெக்னிக்கையும் பயன்படுத்தி தோல்வியிலிருந்து தவிர்க்க வைத்தார். அவருக்கு இணையாக தமிழக வீரர் அஷ்வின் நல்ல பார்டனர்ஷிப் கொடுத்தார்.

‘ஆடு மாமா… ஆடு மாமா’ அஷ்வின் மனைவின் உற்சாக ட்வீட்

இருவரும் மைதானத்தில் தமிழில் பேசிக்கொண்டது தமிழக ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. விஹாரிக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர். அதனால், அவருக்குத் தமிழ் தெரியும்.