தமிழக அரசை விமர்சித்து அமமுகவினர் வைத்த பேனரால் திண்டுக்கல்லில் பரபரப்பு

 

தமிழக அரசை விமர்சித்து அமமுகவினர் வைத்த பேனரால் திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன்பாக தமிழக அரசை விமர்சித்து, அமமுகவினர் வைத்த பிளக்ஸ் பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2500 ரூபாய் ரொக்க பணம் வழங்கி வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனமும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன்பாக பொங்கல் பரிசு வழங்குவதை விமர்சித்து அமமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசை விமர்சித்து அமமுகவினர் வைத்த பேனரால் திண்டுக்கல்லில் பரபரப்பு

அந்த பேனரில் “அரசு பணத்தில் விளம்பரம் தேடும் அதிமுக அரசு” என்ற வாசகம் இடம் பெற்றதால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவற்றை அகற்றக் வலியுறுத்தி ரேஷன் கடைகள் முன்பாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதனை தொடர்ந்து, அமமுக பேனர்களில் இடம்பெற்ற அந்த வாசங்கள் மறைக்கப்பட்டது. மேலும், பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் போலீசார் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.