அம்மன் கோயில் கல்வெட்டில் ஒட்டப்பட்ட மதமாற்ற போஸ்டரால் பரபரப்பு

அம்மன் கோயில் கல்வெட்டில் ஒட்டப்பட்ட மதமாற்ற போஸ்டரால் பரபரப்பு

திண்டுக்கல் அருகே பழமையான கோயில் கல்வெட்டில், கிறிஸ்தவ மத மாற்றம் குறித்த சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியில் அமைந்துள்ளது பழமையான முத்தாலம்மன் கோவில். இங்கு நடக்கும் அம்மன் கண்திறப்பு மற்றும் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருதல் உள்ளிட்டவை மிகவும் பிரசித்தி பெற்றது. அச்சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில் இந்த கோயிலின் வரலாறு குறித்து வைக்கப்பட்டுள்ள பழமையான கல்வெட்டு மீது, நேற்று மர்மநபர்கள் சிலர் கிறிஸ்தவ மத மாற்றம் தொடர்பான சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

அம்மன் கோயில் கல்வெட்டில் ஒட்டப்பட்ட மதமாற்ற போஸ்டரால் பரபரப்பு
அம்மன் கோயில் கல்வெட்டில் ஒட்டப்பட்ட மதமாற்ற போஸ்டரால் பரபரப்பு

இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் மர்மநபர்கள் செய்துள்ள இந்த செயல் குறித்து, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர். இதனிடையே, இந்த போஸ்டர் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மன் கோயில் கல்வெட்டில் ஒட்டப்பட்ட மதமாற்ற போஸ்டரால் பரபரப்பு