முதல்வர் வீடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

 

முதல்வர் வீடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

முதல்வர் வீடு அருகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வடலிவலை கிராமத்தை சேர்ந்த, கிருஷ்ணம்மாள்(60), மீனா (30), கமல் (7) ஆகிய மூன்று பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்பாய்ண்மெண்ட் இல்லாததால் அனுமதி மறுத்தனர். இதனால் அக்குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு முதல்வர் வீடு அருகிலேயே முண்டகண்ணி அம்மன் கோயில் அருகில் பையில் வைத்திருந்த விஷத்தை அருந்தி கிருஷ்ணாம்மாள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மீனா, சிறுவன் கமல் கழுத்தில் கயிறை இறுக்கி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் வீடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

பாதுகாப்பில் இருந்த போலீசார் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 3 பேரிடமும் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணம்மாளின் மகள் ஜமுனா என்பவர் கத்தாரில் தங்கி வேலை செய்து வருகிறார். அங்கு அவரை கொடுமைப்படுத்துவதாக கூறி கிருஷ்ணாம்மாள் பல முறை தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வந்தபோது காவல்துறையினர் அனுமதிக்காததால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.