புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: மக்களுக்கு அறிவுறுத்தல்!

 

புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: மக்களுக்கு அறிவுறுத்தல்!

புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், தற்போது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

புரெவி புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை மதுராந்தகம் ஏரியும் திறக்கப்பட்டது.

புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: மக்களுக்கு அறிவுறுத்தல்!

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததன் படி சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த நீர்மட்டமான 20 அடியில் தற்போது வினாடிக்கு 1,750 கன அடி நீர் வரத்து இருப்பதால் நீர்மட்டம் 19.8ஐ எட்டியுள்ளது. இதனால் தற்போது நீர் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.