3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்ட முதுகலை மருத்துவப் படிப்புக்கு திடீர் தேர்வு! – மாணவர்கள் அதிர்ச்சி

3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்ட முதுகலை மருத்துவப் படிப்புக்கு திடீர் தேர்வு! – மாணவர்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவ தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வருகிற 24ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு

3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்ட முதுகலை மருத்துவப் படிப்புக்கு திடீர் தேர்வு! – மாணவர்கள் அதிர்ச்சி வருகின்றன. இறுதியாண்டு தேர்வு மட்டும் நடத்த பல்கலைக் கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு காரணமாக எப்போது நடத்த முடியும் என்பது தெரியவில்லை.
ஆகஸ்ட் 17ம் தேதி முதுகலை மருத்துவத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. இதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்திருந்தார்.

3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்ட முதுகலை மருத்துவப் படிப்புக்கு திடீர் தேர்வு! – மாணவர்கள் அதிர்ச்சி
முதுநிலை மருத்துவ மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓய்வின்றி உழைக்கும் அவர்களால் தேர்வுகளை எழுத முடியாத நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் வருகிற 24ம் தேதி முதல் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்ட முதுகலை மருத்துவப் படிப்புக்கு திடீர் தேர்வு! – மாணவர்கள் அதிர்ச்சி
மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும்போது எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். தேர்வு மூன்று மாதங்களுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துவிட்டு திடீரென்று தேர்வு தேதியை அறிவித்தால் எப்படி பங்கேற்க முடியும் என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.