அடேங்கப்பா கௌரமா தோக்குறதுக்கே ஒரு பவுனா.. மாஜி அமைச்சரின் அட்ராசிட்டி!

 

அடேங்கப்பா கௌரமா தோக்குறதுக்கே ஒரு பவுனா.. மாஜி அமைச்சரின் அட்ராசிட்டி!

ஒரத்தநாட்டில் ஹாட்ரிக் வெற்றி கண்டவர் முன்னாள் அமைச்சர் இந்நாள் ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம். ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர் அதிமுகவின் அதிகாரமிக்க ஐவர் குழுவில் இடம்பிடித்தவர். இப்போதும் இருக்கிறார். இப்படி அதிமுகவில் செல்வாக்குமிக்க நபராக வலம் வந்தாலும் தொகுதியில் அவரின் செல்வாகு இறங்குமுகமாகவே இருக்கிறது. குறிப்பாக கடந்த தேர்தலிலிருந்தே செல்வாக்கு குறைந்துவிட்டது.

அடேங்கப்பா கௌரமா தோக்குறதுக்கே ஒரு பவுனா.. மாஜி அமைச்சரின் அட்ராசிட்டி!

அதற்கு பப்ளிக்காக நடந்த துன்பியல் சம்பவமே காரணம். 2016ஆம் ஆண்டு ஒரத்தநாட்டில் மீண்டும் போட்டியிட்டார். அவர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும்போது எதிர்பாராவிதமாக ஒருவர் செருப்பை கொண்டு எறிந்தார். இதனை சற்றும் எதிர்பாராத வைத்திலிங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாகவே இது அரங்கேறிவிட்டது என்பதே செல்வாக்கு சரிய காரணமாக அமைந்தது. இதனால் அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

அடேங்கப்பா கௌரமா தோக்குறதுக்கே ஒரு பவுனா.. மாஜி அமைச்சரின் அட்ராசிட்டி!

இப்போது அவர் ராஜ்யசபா எம்பியாக இருந்தாலும் ஒரத்தநாட்டில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய புது தலைவலியாக அமமுக இருக்கிறது. பல்வேறு தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரத்தநாடும் விதிவிலக்கல்ல. அமமுக வேட்பாளர் மா.சேகர் தொகுதியில் செல்வாக்கான ஆசாமி என்பதால் தனிப்பட்ட முறையிலேயே 40 ஆயிரம் வாக்குகளை அள்ளிவிடுவாராம். இதனால் அதிமுக வாக்கு வங்கியில் பிளவு ஏற்பட்டு மீண்டும் அதே திமுக வேட்பாளரான ராமச்சந்திரனிடம் தோல்வியைத் தழுவ வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்பு நிலவரம் சொல்கிறது.

அடேங்கப்பா கௌரமா தோக்குறதுக்கே ஒரு பவுனா.. மாஜி அமைச்சரின் அட்ராசிட்டி!
source m sekar twitter

தோல்வி என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு தோல்வியல்ல படுதோல்வி அடையலாம் என்று கூறப்படுகிறது. இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஆதரவாளர்கள் வேறு தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியிருக்கின்றனர். வெற்றியோ, தோல்வியோ என் தொகுதியிலேயே போட்டு பாத்திடலாம் என்று களமிறங்கியிருக்கிறாராம். தோல்வி நிச்சயம் என்றாலும் கூட அவமானமான தோல்விக்குப் பதில் கௌரவமான தோல்விக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறராம். அதனால் வீட்டுக்கு வீடு ஒரு கிராம் தங்க காசு கொடுக்கும் திட்டம் வைத்திருக்கிறாராம். வைத்திலிங்கம் ராஜ்யசபா எம்பியாகவே தொடர்வார் என்று கூறப்படுகிறது.