“தலைமைச் செயலகமா? அறிவாலயமா?” – உதயநிதி போட்டோவை பார்த்து கொதித்தெழுந்த ஜெயக்குமார்!

 

“தலைமைச் செயலகமா? அறிவாலயமா?” – உதயநிதி போட்டோவை பார்த்து கொதித்தெழுந்த ஜெயக்குமார்!

திமுக மீது எப்போதுமே இருக்கும் ஒரு கரும்புள்ளி வாரிசு அரசியல். திரும்ப திரும்ப ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகார மட்டத்திற்குள் இருக்கிறார்கள். கருணாநிதி, அவரது பிள்ளை ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என இந்த வாரிசு நீண்டுகொண்டே செல்கிறது. இதில் கிளை வாரிசுகள் வேறு இருக்கிறது. சேப்பாக்கம் எம்எல்ஏவான உதயநிதியைக் கட்சிக்குள் முன்னிறுத்தும் வேலை எப்போதோ நடந்துவிட்டது. சொல்லப்போனால் கட்சியில் உள்ளவர்களே உதயநிதி தான் அடுத்த தலைவர் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றே தெரிகிறது.

“தலைமைச் செயலகமா? அறிவாலயமா?” – உதயநிதி போட்டோவை பார்த்து கொதித்தெழுந்த ஜெயக்குமார்!

கட்சியின் மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகன், “நான் கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தேன். ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருக்க போகிறேன். நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்” என்று சொன்னதே அதற்கு சாட்சி. கட்சித் தலைமை அறிவிக்காமலே அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் படத்திற்கு அடுத்ததாக உதயநிதியின் படம் பொறித்த பேனர்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலினே கட்சியினரை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் உதயநிதியைப் போற்றும் வேலையை செம்மையாக செய்து வருகின்றனர் கட்சி நிர்வாகிகள்.

“தலைமைச் செயலகமா? அறிவாலயமா?” – உதயநிதி போட்டோவை பார்த்து கொதித்தெழுந்த ஜெயக்குமார்!

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க தற்போது ஆட்சி அதிகாரத்திலும் உதயநிதியை முன்னிறுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. ஸ்டாலின் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அங்கு செல்வது, அரசு அலுவலகங்களில் ஸ்டாலின் படத்துடன் உதயநிதியின் படமும் இருப்பது அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதேபோன்று சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படம் தலைமைச் செயலகத்திலேயே இருப்பது தான் அந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

தலைமைச் செயலகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் படங்களின் பக்கத்தில் உதயநிதி படமும் இடம்பெற்றுள்ளது.இப்பதிவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக, அதிமுக ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம்… தலைமை செயலகமா? அறிவாலயமா ?” என்று குறிப்பிட்டுள்ளார்.