“பிரிக்க முடியாதது என்ன? திமுகவும் மின்வெட்டும்” – வறுத்தெடுத்த முன்னாள் மின் துறை அமைச்சர்!

“பிரிக்க முடியாதது என்ன? திமுகவும் மின்வெட்டும்” – வறுத்தெடுத்த முன்னாள் மின் துறை அமைச்சர்!

திமுகவிற்கும் மின்தடைக்கும் ஏழாம் பொருத்தம் தான் எப்போதும். மின்தடைக்கு திமுக கொடுத்த விலை ஐந்து வருட ஆட்சி. அந்தளவிற்கு மக்கள் மீது திமுகவிற்கு அப்படியொரு கரும்புள்ளி இருக்கிறது. வேறு யாரை விடவும் மின்தடையின் வலி திமுகவிற்கு நன்றாகவே தெரியும். பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பிறகும் அதே மின்தடை திமுகவிற்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன. எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்த தமிழ்நாடு அரசுக்கு யார்க்கர் போடுகிறது மின்தடை.

“பிரிக்க முடியாதது என்ன? திமுகவும் மின்வெட்டும்” – வறுத்தெடுத்த முன்னாள் மின் துறை அமைச்சர்!

இதற்கு முந்தைய அரசின் அலட்சியமே காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவிக்கிறார். புனரமைப்பு பணிகள் முடிவடைந்து 10 நாட்களுக்குள் பிரச்சினைகள் களையப்படும் என செந்தில் பாலாஜி கூறியிருந்தார். ஆனால் இன்னமும் சரியாகவில்லை. இச்சூழலில் மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது என்ற புது காரணத்தைக் கூறினார்.

“பிரிக்க முடியாதது என்ன? திமுகவும் மின்வெட்டும்” – வறுத்தெடுத்த முன்னாள் மின் துறை அமைச்சர்!

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம், அந்தத் துறை அமைச்சராக உள்ளவருக்கு மின் துறை குறித்து புரிதல் இல்லாதது தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது திமுகவும், மின்வெட்டும் தான். தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்புப் பணிகளை 4 தினங்களில் செய்து முடித்து விடலாம். கடந்த அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகள் மின் துறை அமைச்சராக இருந்த எனக்கு மின்வெட்டுக்கு அணில்கள் தான் காரணமா என தெரியவில்லை” என்றார்.