Home சினிமா “எதையுமே காட்ட வில்லை” பிக்பாஸ் மீது புகார் சொல்லும் முன்னாள் போட்டியாளர்கள்!

“எதையுமே காட்ட வில்லை” பிக்பாஸ் மீது புகார் சொல்லும் முன்னாள் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முந்தைய சீசன் போல விறுவிறுப்பாக இல்லை என்ற விமர்சனம் பல இடங்களிலிருந்து எழுகின்றன. ஆனால், கடந்த இரு வாரங்களாக ஆரியின் சகப் போட்டியாளர்களோடு மோதிக்கொள்ளும் காட்சிகளால் கொஞ்சம் சுவாரஸ்யமாகச் செல்கிறது. ஆயினும் மூன்றாம் சீசன் அளவுக்கு இல்லை என்பதே பொதுவான கருத்து.

சென்ற சீசனில் மதுமிதா வெளியேற்றப்பட்டபோது, ‘நான் பேசிய கருத்துகள். என்னைப் பற்றிய காட்சிகள் காட்டப்படவே இல்லை’ என்பதாக பிக்பாஸ் மீது குறை சொன்னார். அப்போது அது கடும் விவாதத்திற்கு உள்ளானது.

இப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முன்னாள் போட்டியாளர்களும் பிக்பாஸ் ஒளிப்பரப்ப தேர்தெடுக்கும் காட்சிகளைப் பற்றி புகார் தெரிவிக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வந்ததும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தார். ஆனால், நெட்டிசன்கள் அதிலும் குறிப்பாக ஆரி ஆர்மியினர் அர்ச்சனாவை வறுத்தெடுத்தனர்.

’எல்லோரின் மீது அன்பு பொழிந்த நீங்கள், ஏன் ஆரி மீது அன்பு காட்ட வில்லை?’ என்று கேட்டவரிடம், ”ஆரியிடமும் நான் அன்பாகவே பழகினேன். அதையெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்ட வில்லை’ என்று பதிவிட்டார். மேலும், நிறைய கேள்விகள் இப்படியே வர ட்விட்டரிலிருந்தே விலகினார் அர்ச்சனா.

அர்ச்சனாவைத் தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட அனிதாவும் பிக்பாஸ் மீது குறை சொல்லியிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிக்பாஸ் வீட்டில் நான் கேப்டனாக இருந்தபோது பேசிய விஷயங்கள் எதுவுமே நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாக வில்லை. நாள் ஒன்றுக்கு ஒரு தலைப்பாக வைத்து பேசினேன்.

திங்கள் கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, செவ்வாய் கிழமை அன்று திருநங்கைகளின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், புதன்கிழமை யன்று பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கை, வியாழக்கிழமை விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து, வெள்ளிக்கிழமை விதவைகளும் அவர்களுக்கான மறுமணம் குறித்தும் பேசினேன்.

ஆனால், இவற்றில் எதுவுமே நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பில் இடம்பெற வில்லை. அதை நான் சோஷியல் மீடியா மூலம் தொடர்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

உறவினர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று பார்க்கும் டாஸ்க்கில்கூட, ரியோ தனது மனைவியிடம் ஆரியும் தவறுகள் செய்கிறார். அவை காட்டப்படுகிறதா என்று தெரியவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரம் நடப்பதை சுமார் 1 மணி நேர அளவில் நிகழ்ச்சியாகக் காட்டுகிறார்கள். அதை எடிட் பண்ணும் விதத்திலேயே ஒருவரை நல்லவராகவும் ஒருவரை கெட்டவராகவும் காட்ட முடியும். அதைத்தான் வெளியேறியவர்களின் கருத்தாக இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

மக்கள் நீதி மையத்தை திமுக கூட்டணிக்கு கொண்டுவர உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியானதை கமல்ஹாசனும் உறுதிப்படுத்தினார். ஆனால் தூது அனுப்புவது எல்லாம்...

குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000! கமலை காப்பியடித்த ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை என வேகம்...

“காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களா? என திமுகவிற்கு கவலை

காங்கிரஸ்க்கு குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற...

வேடச்சந்தூரில் வடமாநில ஒப்பந்ததாரரிடம் ரூ.13.9 லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல் வேடச்சந்தூர் அருகே சாலை ஒப்பந்ததாரர் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த 13 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
TopTamilNews