• February
    17
    Monday

Main Area

Main



கொஞ்சம் கண்ணு அசந்தா போச்சு, தூங்கிடாதடா கைப்புள்ள‌

EVMs
EVMs

ஓட்டு போடும்முன் வாக்காளர்களுக்கு சாராயம் வாங்கி தருவது, புடவை வாங்கித் தருவது, கள்ள ஓட்டு போடுவது, ஓட்டுக்குப் பணம் தருவது என ஆரம்பிக்கும் அரசியல், ஓட்டு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை மையத்தை அடித்து உடைப்பது, வாக்குப்பெட்டியை உடைப்பதில் வந்து நிற்கும். இதெல்லாம் பழங்கதை. அவர்களே சொல்வதுபோல், பாஜக ஒரு வித்தியாசமான கட்சி இல்லையா. அதனால் அவர்கள் மேலே சொன்னதோட நிறுத்தாமல், வாக்குப்பெட்டியையே மாற்றக்கூடியவர்கள் என நினைக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இரவு பகலாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல்காத்து வருகிறார்கள்.

Opposition Leaders Meet EC

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக அரசு தில்லுமுல்லு செய்கிறது, எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் தாமரை மட்டுமே மலர்கிறது என்ற புகாருடன் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் என எதிர்கட்சிகள் வரிசையாக சென்று மூக்கு சிந்தின. தில்லுமுல்லா? நாங்களா? சேச்சே அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது என பாஜக அப்பாவியாக சொல்லிவிட்டது. இவிங்க அவ்வளவு எல்லாம் நல்லவய்ங்க‌ கிடையாதே என எதிர்கட்சிகளுக்கு உதறல் நிற்கவில்லை. தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பாஜக சில்லறை தில்லுமுல்லு வேலை செய்யவில்லை, மாறாக வாக்கு இயந்திரத்தையே அவர்கள் மொத்த விலைக்கு வாங்கி மொத்தமாக தில்லுமுல்லு செய்யப்போகிறார்கள் என்ற தகவல் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கப்பெற, வாக்கு மையத்தின் வாசலிலேயே டென்ட் அடித்துவிட்டனர்.

Party Workers Vigilance

பாஜக வலுவாக இருக்கக்கூடிய வடமாநிலங்களில், கட்சி மேலிடங்களின் உத்தரவை ஏற்று, ஷிஃப்ட் போட்டு தொண்டர்கள் வாக்கு மையங்களுக்கு இரவு பகலாக‌ காவல் காத்து வருகின்றனர். "உங்களுக்கு எதுக்கு சிரமம், அதான் நாங்க இருக்கோம்ல, வாக்கு இயந்திரங்களை நாங்க பத்திரமா பாத்துக்குறோம்" என்று தேர்தல் அதிகாரிகள் சொன்னதற்கு, " "உங்ககிட்டேர்ந்து மிஷினை காப்பத்துறதுதான்யா எங்களுக்கு பெரும்பாடா இருக்கு" என்று சொல்லி வாயடைத்து அனுப்பிவிட்டார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.