Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் அருகம்புல் ஜூஸ் தெரியும்... கோதுமை புல் ஜூஸ் பயன்கள் தெரியுமா?

அருகம்புல் ஜூஸ் தெரியும்… கோதுமை புல் ஜூஸ் பயன்கள் தெரியுமா?

ஹெல்த்தி ஃபுட் ஆர்வலர்களின் தேர்வாக அருகம்புல் சாறு உள்ளது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாக மாறிவிட்டது. அதை விட அதிக ஆற்றல் கொண்டது கோதுமை புல் ஜூஸ் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோதுமை புல் ஜூஸை ஒரு சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். இதில், இரும்புச்சத்து, கால்ஷியம், மக்னீஷியம், 17 அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, சி, இ, கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

தொடர்ந்து கோதுமைபுல் சாறு அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். உடலை டீடாக்சிஃபிகேஷன் செய்ய நல்ல முறை இது. கல்லீரல் செயல்திறன் மேம்படும். ஒட்டுமொத்த உடல் நலமும் முன்னேற்றம் காணும்.

இதில் உள்ள என்சைம்கள் செரிமான மண்டலத்தைத் தூண்டுகின்றன. இதனால், உணவு மிக எளிதாக உடைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றன. உணவு செரியாமை, எதுகளிப்பு, இரிட்டபிள் பவுள் சிண்டிரோம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து அருந்தலாம்.

உடலின் வளர்சிதை மாற்றப் பணிளைத் தூண்டுகிறது. இதனால், உடலில் உள்ள கொழுப்பு வேகமாக எரிக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் கோதுமை புல் ஜூஸ் குடித்தால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். சீக்கிரம் பசிக்காது. எனவே, அதீத பசி பிரச்னை உள்ளவர்கள், உடல் எடையால் அவதியுறுபவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.

கோதுமை புல் ஜூஸ் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு வெளியேறி இதயம் பாதுகாக்கப்படுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி, இ உள்ளிட்டவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாட்டுக்கான வேலைகள் நடந்து வந்த வேளையில் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் மாநாட்டினை சட்டமன்ற தேர்தலுக்கான பொதுகூட்டமாக நடத்துகிறது திமுக. இன்று...

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ : அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்...

நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடனான சந்திப்பின்போது, அவர் பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக பேசவில்லை என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி...
TopTamilNews