தைராய்டு பிரச்னை… அறிகுறிகள் அறிவோம்!

 

தைராய்டு பிரச்னை… அறிகுறிகள் அறிவோம்!

நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான ஆற்றலை வழங்குவது தைராய்டு ஹார்மோன்தான். நம்முடைய கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி போன்ற வடிவில் அமைந்திருக்கும் சுரப்பிதான் தைராய்டு. இந்த ஹார்மோன் சுரப்பு போதுமானதாக இல்லாதபோது ஹைபோதைராய்டிசம் எனப்படும் தைராய்டு பிரச்னை வருகிறது.

தைராய்டு பிரச்னை… அறிகுறிகள் அறிவோம்!

தைராய்டு தான் இதயத் துடிப்பு, செரிமான அமைப்பு என அனைத்து உள் உறுப்பு, செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. தைராய்டு போதுமான அளவு சுரக்கவில்லை என்றால் உடலின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாகிவிடும். தைராய்டு பிரச்னை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் அதிக அளவில் வருகிறது.

அறிகுறிகள்:

அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். எந்த எந்த அறிகுறிகள் எப்போது வருகிறது என்பதைப் பொருத்து தைராய்டு சுரப்பி பிரச்னையின் தீவிரத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள். இதன் அறிகுறிகளை எளிதில் கண்டறிவதும் கடினம்.

பொதுவான சில அறிகுறிகள்:

சோர்வு

உடல் எடை அதிகரிப்பு

முகத்தில் வீக்கம்

மன அழுத்தம்

மலச்சிக்கல்

உடல் சில்லிட்டுப் போதல்

வியர்வை அளவு குறைதல்

இதயத் துடிப்பு குறைதல்

ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல்

உலர் சருமம்

முடி உலர்ந்து ஜீவனின்றி இருப்பது

நினைவாற்றல் குறைவு

குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு குறைதல்

மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள்

தசைகள் வலுவின்மை

தசை, மூட்டுக் கடினமாக இருத்தல்

பேச்சில் பிரச்னை

யாருக்கு எல்லாம் ஹைபோதைராய்டு பிரச்னை வரலாம்:

பெண்கள்

60 வயதைக் கடந்தவர்கள்

குடும்பத்தில் ஹைபோதைராய்டு பிரச்னை உள்ளவர்கள்

சில வகையான ஆட்டோ இம்யூன் பிரச்னை உள்ளவர்கள்

டைப் 1 சர்க்கரை நோயாளிகள்

பலருக்கு அறிகுறிகள் பல ஆண்டுகளாக வெளிப்படாமல் பிரச்னை தீவிரமாகிக் கொண்டே செல்லும். தைராய்டு உடலின் இயக்கத்தைக் குறைக்க குறைக்க அதை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.  தைராய்டு பிரச்னைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் டிஎஸ்எச் எனப்படும் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன், டி4 உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்ய சொல்வார்கள். இதன் அடிப்படையில் சிகிச்சை முடிவு செய்யப்படும்.