சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் கூறிய அனைத்தும் பொய்! – சிசிடிவி காட்சிகள் வெளியானது

 

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் கூறிய அனைத்தும் பொய்! – சிசிடிவி காட்சிகள் வெளியானது

சாத்தான்குளத்தில் செல்போன் கடையை நீண்ட நேரம் திறந்த வைத்ததாக கூறி கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த தந்தை, மகன் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தகவல் அனைத்தும் தவறானது என்று உறுதியாகி உள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் கூறிய அனைத்தும் பொய்! – சிசிடிவி காட்சிகள் வெளியானது
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு நீண்ட நேரம் செல்போன் கடையை திறந்து வைத்ததாகவும், கூட்டமாக நின்று பேசியதாகவும் செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீஸ் நடத்திய தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து வருகிறது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் கூறிய அனைத்தும் பொய்! – சிசிடிவி காட்சிகள் வெளியானது
ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு கூட போலீசார் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சாத்தான்குளம் காவல் நிலையத்தை கையகப்படுத்தி, விசாரணையை வழிநடத்த வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் கூறிய அனைத்தும் பொய்! – சிசிடிவி காட்சிகள் வெளியானது
இந்த நிலையில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. செல்போன் கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் அனைத்துக் காட்சிகளும் பதிவாகி உள்ளதாக அதை அளித்தவர்கள் கூறியுள்ளனர்.
அந்த காட்சியில் ஜெயராஜ் கடைக்கு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது போலீஸ் வாகனம் ஒன்று வந்து ஜெயராஜை அழைக்கிறது. அவரை அவர்கள் வண்டியில் ஏற்றுகிறார்கள். தகவல் அறிந்து கடைக்கு உள்ளே இருந்து ஃபெனிக்ஸ் போலீசாரிடம் சென்று பேசுகிறார். பின்னர் அவர் போனை பார்த்தபடி கடைக்கு திரும்பிவருகிறார். போலீஸ் வண்டி அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது.
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி இரவு நீண்ட நேரம் கடையை திறந்து வைத்ததாகவும், கடைக்கு வெளியே அதிக மக்கள் இருந்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் கூறி வந்தனர். ஆனால், இந்த சிசிடிவி காமரா காட்சியில் ஜெயராஜை மட்டும் அழைத்துச் செல்வது தெரிகிறது. ஃபெனிக்ஸ் இருசக்கர வாகனத்தில் ஏறி காவல் நிலையம் செல்வதும் பதிவாகி உள்ளது.
இதன் மூலம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்ததும், அவர்களாக காவல் நிலையம் சென்றதும் உறுதியாகி உள்ளது. கடை முன்பு கூட்டம் இல்லை. ஜெயராஜ் மட்டுமே நின்று கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது தாமாக முன்வந்து போலீஸ் நிலையம் சென்றவர்களை அடித்துக் கொன்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ உண்மையானது இல்லை, இது மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கூறுகிறது. ஆனால், இது செல்போன் கடையில் எடுக்கப்பட்டது என்று ஃபெனிக்ஸ் நண்பர்கள், உறவினர்கள் கூறுகின்றனர்.