கொரோனா பாதிப்பை தடுக்க இதுதான் ஒரே வழி : பீலா ராஜேஷ் சொல்லும் அட்வைஸ்!

 

கொரோனா பாதிப்பை தடுக்க இதுதான் ஒரே வழி : பீலா ராஜேஷ் சொல்லும் அட்வைஸ்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1515 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுக்க இதுதான் ஒரே வழி : பீலா ராஜேஷ் சொல்லும் அட்வைஸ்!

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆண், பெண் என யார் வீட்டை விட்டு சென்றாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டில் வயதானவர்கள், நோய் பாதிப்பு ஏற்பட கூடியவர்கள் இருப்பின் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது முகக்கவசம் அணிவது அவசியம். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை தடுக்க முடியும்.

மருத்துவமனைகளுக்க்கு வெளிப்புறத்தில் அனைவரும் கைக்குட்டை, துப்பட்டா, வீட்டில் தயாரித்த மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதை நன்கு துவைத்து காயவைத்து பின் உபயோகிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.