கொரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்கிறோம் : பிரதமர் மோடி

 

கொரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்கிறோம் : பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்து கொண்டார். ஆந்திரா, பீகார், குஜராத், உ. பி, மேற்கு வங்காளம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்கிறோம் : பிரதமர் மோடி

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் ஆன ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, “நாட்டின் தொற்று பாதிப்பில் 80% 10 மாநிலங்களில் உள்ளது. கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது .

கொரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்கிறோம் : பிரதமர் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது. நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது, பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இறப்பு குறைந்து குணமடைந்தார் எண்ணிக்கை அதிகரிப்பது நாம் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறது. பீகார், குஜராத், மேற்கு வங்கம், தெலுங்கானாவில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.  கொரோனா பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது-புதிய சூழலும் உருவாகிறது” என்றார்.