2050ல் 4ல் ஒருவருக்கு காது கேளாமை பிரச்னை இருக்கும்! – WHO எச்சரிக்கை

 

2050ல் 4ல் ஒருவருக்கு காது கேளாமை பிரச்னை இருக்கும்! – WHO எச்சரிக்கை

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஒலி மாசு காரணமாக 2050ம் ஆண்டில் நான்கில் ஒருவருக்கு காது கேளாமை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் நிலை வரும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரித்து வரும் காதுகேளாமை பிரச்னை தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டில் 432 மில்லியன் பெரியவர்கள், 34 மில்லியன் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இவர்களில் வெறும் 17 சதவிகிதம் பேர் மட்டுமே காது கேட்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2050ல் 4ல் ஒருவருக்கு காது கேளாமை பிரச்னை இருக்கும்! – WHO எச்சரிக்கை

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய காது கேளாமை பிரச்னையில் 60 சதவிகிதம் தவிர்த்திருக்கக் கூடியதாகவே உள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள, நடுத்தர பொருளாதார நாடுகளைச் சார்ந்தவர்களே அதிக அளவில் காது கேளாமை பிரச்னைக்கு ஆளாகின்றனர்.

காது கேளாமைக்கு ஒலி மாசு, ஹெட்போன் பயன்பாடு என பல காரணங்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதிகரித்து வரும் காதுகேளாத நோயாளிகள் எண்ணிக்கையை எதிர்கொள்ளும் வகையில் இ.என்.டி மருத்துவர்கள், ஸ்பீச் தெரபிஸ்ட், ஆடியாலஜிஸ்ட் எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள, நடுத்தர பொருளாதார நாடுகளில் குழந்தைகள் மத்தியில் காது கேளாமை அதிகரிக்க ரூபெல்லா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமை முக்கிய காரணமாக இருக்கிறது.

இதே நிலை நீடித்தால் 2050ம் ஆண்டில் 110 கோடி இளைஞர்களுக்குக் காது கேளாமை பிரச்னை இருக்கும் என்று அது எச்சரிக்கைவிடுத்துள்ளது.