செலவு குறைந்தது…. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு..

 

செலவு குறைந்தது…. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு..

2020 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.24.98 கோடி ஈட்டியுள்ளது.

பேட்டரி மற்றும் லைட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.24.98 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3 மடங்குக்கு மேல் அதிகமாகும்.

செலவு குறைந்தது…. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு..
எவரெடி பேட்டரி

2019 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபமாக ரூ.6.91 கோடி ஈட்டியிருந்தது. 2020 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் 20.46 சதவீதம் குறைந்து ரூ.263.44 கோடியாக சரிவடைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.331.23 கோடியை வருவாயாக ஈட்டியிருந்தது.

செலவு குறைந்தது…. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு..
எவரெடி டார்ச்

2020 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செலவினம் 26.20 சதவீதம் சரிந்து ரூ.243.11 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செலவினம் ரூ.329.45 கோடியாக உயர்ந்து இருந்தது. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை 0.92 சதவீதம் குறைந்து ரூ.145.00ஆக சரிவடைந்தது.