தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம்- தமிழக பாஜக தலைவர் முருகன் நம்பிக்கை!

 

தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம்- தமிழக பாஜக தலைவர் முருகன் நம்பிக்கை!

திருச்சி

பா.ஜ.க இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ்.செல்வம் தலைமையில் திருச்சியில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பா.ஜ.கவினர் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். புதிய கல்வி கொள்கை மாணவர்களை சர்வதேச அளவில் உயர்த்தும் என பிரதமர் கூறியுள்ளார். தொழிற்கல்வி மூலம் மாணவர்கள் பல்வேறு தொழில்கள் குறித்து அறிந்து கொள்வார்கள்.அதை கற்று கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை இல்லாததால் பல ஏழை எளிய மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கற்க முடியாத நிலை உள்ளது.மாணவர்கள் பல மொழிகள் கற்க விருப்பமாக உள்ளனர்.அதை தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது. தி.மு.க வினர் நடத்தும் பள்ளிகளில் பல மொழிகள் கற்று தரப்படுகிறது. அவர்களின் போலி முகத்திரைக்கு எதிராக அந்த பள்ளிகள் முன்பு பா.ஜ.க இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம்- தமிழக பாஜக தலைவர் முருகன் நம்பிக்கை!

ராமரா, முருகனா என்பது முக்கியமல்ல இருவரும் கடவுள் தான்.முருகனின் கந்த சஷ்டி குறித்து அவதூறு பரப்பியதால் நாங்கள் போராடினோம்.அந்த அவதூறை பரப்பியதன் பின்னனியில் தி.மு.க இருக்கிறதா என்பது தான் எங்களின் கேள்வி அதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

தமிழக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க முக்கிய பங்காற்றும்.நாங்கள் தனித்து நின்றாலே 60 சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதிக அளவிலான பா.ஜ.க வினர் வரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார்கள். அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம். கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.அவர்கள் கட்சியில் இணைந்த பின்பு அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.அவர்கள் செயல்பாடுகள் சரியில்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க பா.ஜ.க இடையேயான கூட்டணி உறவு சிறப்பாக இருக்கிறது.எங்களுக்குள் எந்த சிக்கலும் விரிசலும் இல்லை.கூட்டணி குறித்து தேவையற்ற சர்ச்சைகளை மக்கள் தான் உருவாக்குகிறார்கள்.கூட்டணி குறித்து கட்சி தலைமை என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும்” என்றார்.