63 பஞ்சாயத்துகளுக்கு பொது நிதி ஒதுக்காததால் தஞ்சாவூர் ஒன்றியத்தில் முடங்கிய அத்தியாவசிய பணிகள்

 

63 பஞ்சாயத்துகளுக்கு பொது நிதி ஒதுக்காததால் தஞ்சாவூர் ஒன்றியத்தில் முடங்கிய அத்தியாவசிய பணிகள்

தஞ்சை ஒன்றியத்தில் 63 பஞ்சாயத்துகள் உள்ளன. கடந்த 9 மாதங்களாக பொது நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக கிராமப்புறங்களில் செய்யப்படவேண்டிய குடிநீர் வசதி சாலை விளக்குகள் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் செய்ய முடியாமல் முடங்கிய நிலையில் உள்ளது. பஞ்சாயத்து தலைவர்கள் பொது மக்களுக்கு அத்தியாவசிய பணிகளை செய்து கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

63 பஞ்சாயத்துகளுக்கு பொது நிதி ஒதுக்காததால் தஞ்சாவூர் ஒன்றியத்தில் முடங்கிய அத்தியாவசிய பணிகள்

இதுகுறித்து தஞ்சை ஒன்றியம் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் கோப்பெருந்தேவி, ‘’ பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகிவிட்டது. பஞ்சாயத்துக்கு வரவேண்டிய அரசின் நிதி உதவி இதுவரை வரவில்லை. இதன் காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகளான குடிநீர் பராமரிப்பு, சாலை மின் விளக்குகள் பராமரிப்பு மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட எந்த பணியும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

அரசிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நிதி வழங்கவில்லை. பொதுமக்களிடம் பதில் சொல்லும் நிலையில் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளனர்.

பொதுமக்களால் பஞ்சாயத்து தலைவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்’’ என ஊடகங்கள் மூலமாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.