`அவர் மீது வழக்குப் போடாதீங்க… மாணவி கெஞ்சல்… எஸ்கேப் ஆன சென்னை மாநகராட்சி இன்ஜினீயர்!’- வலை வீசும் சென்னை போலீஸ்

 

`அவர் மீது வழக்குப் போடாதீங்க… மாணவி கெஞ்சல்… எஸ்கேப் ஆன சென்னை மாநகராட்சி இன்ஜினீயர்!’- வலை வீசும் சென்னை போலீஸ்

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி இன்ஜினீயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடி வாபஸ் பெற சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று மாணவிக்கு அறிவுரை கூறியுள்ளது போலீஸ். மாணவி எவ்வளவு கெஞ்சியும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தலைமறைவான இன்ஜினீயரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

`அவர் மீது வழக்குப் போடாதீங்க… மாணவி கெஞ்சல்… எஸ்கேப் ஆன சென்னை மாநகராட்சி இன்ஜினீயர்!’- வலை வீசும் சென்னை போலீஸ்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல் இருக்கிறதா என களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.

இதுதவிர மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் வடசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் விடுமுறை என்பதால் கொரோனா தடுப்பு களப்பணிக்கு வந்துள்ளார். அந்த மாணவியும் உதவி இன்ஜினீயர் ஒருவரும் செல்போனில் பேசிய உரையாடல் சில தினங்களாக சமூகவலைதளத்தில் வைரலாகிவந்தது.

இதையடுத்து எஸ்பிளனேடு அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி, நடந்த உண்மைகளை கூறியுள்ளார். இந்தநிலையில் உதவி இன்ஜினீயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்ஜினீயருக்கு ஆதரவாக மாணவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில், “தொற்று காரணமாக நான் கல்லூரிக்குச் செல்லவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ பெண் களப்பணியாளர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். பின்னர் அந்த வேலையில் சேர்ந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன். இந்தப் பணிக்கு சென்னை மாநகராட்சியில் உதவி இன்ஜினீயராக இருக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

`அவர் மீது வழக்குப் போடாதீங்க… மாணவி கெஞ்சல்… எஸ்கேப் ஆன சென்னை மாநகராட்சி இன்ஜினீயர்!’- வலை வீசும் சென்னை போலீஸ்

நான் தினமும் விழிப்புணர்வு பணிக்கு வரும்போது எனது குடும்ப ஏழ்மை சூழ்நிலையை அறிந்த இன்ஜினீயர் என் மீது அக்கறைக் கொண்டு பேசுவார். பின்னர் அவர், என்னுடைய மேற்படிப்பதற்கு உதவி செய்வதாக செல்போனிலும் நேரிலும் கூறி வந்தார். அவர் ஒரு போதும் தவறான எண்ணத்தில் என்னிடம் பழகியதும் இல்லை. நானும் இன்ஜினீயரும் பேசிய செல்போன் உரையாடல்களை எனது அனுமதியின்றி எனக்கு தெரியாமல் யாரோ என் செல்போனிலிருந்து திருடி அதை பார்வேர்டு செய்து அதை எடிட்டிங் செய்து சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பிவிட்டுவிட்டனர். என் எதிர்கால வாழ்க்கையை கேவலப்படுத்தியதால் பொது மக்கள் மத்தியில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறேன்.

நான் சென்னை மாநகராட்சி அதிகாரியிடமும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஜினீயர் மீது எந்தவித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் ஒருபோதும் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இன்ஜினீயரை பழிவாங்க யாரோ என்னை கேவலப்பத்தி பகடைக்காயாய் பயன்படுத்தி வருவதுதான் உண்மை. ஆகவே நான் இன்ஜினீயர் மீது எந்தவித வாய்மொழி, எழுத்து மூல புகாரையும் யாரிடமும் குறிப்பாக எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கவில்லை. ஆனால் செல்போன் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை செய்தார்.

நான் நடந்த உண்மைகளை கூறி இன்ஜினீயர் நல்லவர், என் மீது அக்கறை கொண்ட மனிதர். எனக்கு படிப்பு சம்பந்தமான நல்ல ஆலோசனைகளையும் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனைகளையும் சொல்லி வழிகாட்டியாக இருப்பவர். என்னிடம் அவர் ஒரு போதும் தவறாக பழகியதில்லை. அவர் எனக்கு ஒரு நல்ல ஆண் நண்பராவர். விழிப்புணர்வு பணியில் உள்ள தொடர்பு மட்டுமே எங்களுக்குள் உண்டு. வேறு எந்தவித தவறான உறவும்கிடையாது. மேற்கூறியவற்றை எனது வாக்குமூலமாக ஏற்று எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலைய போலீஸாரோ அல்லது வேறு யாரும் இன்ஜினீயர் மீது பொய் வழக்கு போடாமலும் எனது எதிர்கால நலன்கருதி பாதுகாப்பு ஏற்படுத்தி தருமாறும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்” என்று கூறியிருந்தார் .

அப்போது போலீசார், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றம் மூலம் அதை வாபஸ் பெற சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். இந்தநிலையில் உதவி இன்ஜினீயர் மீது 354 ஐபிசி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவி இன்ஜினீயரின் வீடு பூட்டப்பட்டுள்ளதால் அவரை தேடிவருகின்றனர்.