ஈரோட்டில் நள்ளிரவில் கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற மர்மநபர்களால் பரபரப்பு

 

ஈரோட்டில் நள்ளிரவில் கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற மர்மநபர்களால் பரபரப்பு

ஈரோடு

ஈரோட்டில் மர்மநபர்கள் நள்ளிரவில் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு ரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், புத்தாண்டையொட்டி இன்று காலை சிறப்பு பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க பூசாரி சென்றுள்ளார். அப்போது கோவிலின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரோட்டில் நள்ளிரவில் கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற மர்மநபர்களால் பரபரப்பு

இதனை அடுத்து, கொள்ளையர்கள் சடயம்பாளையம் புறவ்ழி சாலையில் வீசி சென்ற கோயில் உண்டியலை மீட்ட போலீசார், கொள்ளை நடந்த கோவில் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அதில் பதிவான உருவங்களின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் பழைய பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு கோயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவபம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.