மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு எஸ்.பி., சசிமோகன்!

 

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு எஸ்.பி., சசிமோகன்!


ஈரோடு

அந்தியர் அடுத்த கத்திரி மலைக்கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு, மாவட்ட எஸ்.பி சசிமோகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கத்திரி மலை கிராமத்தில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக மலை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நல உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி சசிமோகன் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கத்திரி மலையை சேர்ந்த 90 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், ஆடைகளை வழங்கினார். மேலும், அங்குள்ள பள்ளிக் கூடத்திற்கு 2 சோலார் விளக்குகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு எஸ்.பி., சசிமோகன்!

தொடர்ந்து எஸ்.பி. சசிமோகன், மலைவாழ் மக்களுக்கு, ஆதார் அட்டையின் முக்கியத்துவம், பெண் கல்வி, குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய உதவி தொகைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். அத்துடன், மலைப் பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், பவானி உட்கோட்ட டிஎஸ்பி கார்த்திகேயன், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில், சென்னம்பட்டி வனசரகர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மாவோயிஸ்ட் நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.