ஈரோடு எஸ்.பி . அலுவலக கேன்டீன்.. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

ஈரோடு எஸ்.பி . அலுவலக கேன்டீன்.. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

ஈரோடு எஸ். பி. அலுவலக வளாகத்தில் கேன்டீன் செயல்பட்டு வந்தது. இங்கு காபி, டீ காலையில் இட்லி , பொங்கல் மதியம் லெமன் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது . இதனால் காவல்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் என எப்போதும் கேண்டீனில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஈரோடு எஸ்.பி . அலுவலக கேன்டீன்.. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

இந்நிலையில் எஸ்பி அலுவலக வளாகத்தில் புதிதாக நவீன கேன்டீன் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகளும் நடந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30 லட்சம் மதிப்பில் நவீன கேன்டீன் கட்டப்பட்டது. இந்த கேன்டீன் கட்டிடத்தை, கடந்த மாதம் நடந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் திறந்து வைத்தனர்.

ஈரோடு எஸ்.பி . அலுவலக கேன்டீன்.. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

இன்று அந்த கேண்டீன் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. எஸ்பி தங்கத்துரை நவீன கேன்டீன் திறந்து வைத்து சாப்பிட்டார். பின்னர் சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.

ஏ.டி.எஸ்.பி பொன் கார்த்திக், போக்குவரத்து டி.எஸ்.பி உதயகுமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், லயோலா உட்பட காவல் அதிகாரிகள்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.