ஈரோட்டில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.5.15 லட்சம் மீட்பு

ஈரோட்டில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.5.15 லட்சம் மீட்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் பேசுதுபோல் நடித்து, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து திருடப்பட்ட 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மர்மநபர்கள், பொதுமக்களிடம் வங்கி அதிகாரிகள் பேசுவதுபோல் தொலைபேசி வாயிலாக பேசி 16 இலக்க எண், சிவிவி எண் மற்றும் ஓடிபி உள்ளிட்ட விவரங்களை பெற்று, போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வந்தனர்.

ஈரோட்டில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.5.15 லட்சம் மீட்பு

இதுதொடர்பாக, மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. புகார்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தீவிர நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு தற்போது வரை பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர்.

ஈரோட்டில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.5.15 லட்சம் மீட்பு

இதனை தொடர்ந்த இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தொகையை மாவட்ட எஸ்.பி தங்கதுரை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தொலைத்த 53க்-கும் மேற்பட்ட 53 செல்போன்களையும் மீட்ட போலீசார், அவற்றையும் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ 6 லட்சத்து 33 ஆயிரம் என எஸ்.பி. தெரிவித்தார்.