ஈரோடு- நில மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

 

ஈரோடு- நில மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அனுபவிதித்து வருவதை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு- நில மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

ஈரோடு மாவட்டத்தில், மொடக்குறிச்சி வட்டம், நஞ்சை ஊத்துக்குளி -வடுகபட்டி – கொங்குடையாம்பாளையம் கிராமங்களில் 1980 -ம் ஆண்டுகளில் நில உச்சவரம்பு சட்டத்தின் பட்டியிலின மக்களுக்கு சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலங்களை மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர். இந்த நிலங்களை மீட்க கோரி, அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில், வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஈரோடு- நில மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

இதையடுத்து, மொடக்குறிச்சி வட்டாச்சியர் தலைமையில் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை விரைவாக மீட்டு வாரிசுதாரர்களுக்கும், புதிய நபர்களை தேர்வு செய்தும் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நில மீட்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தெரிவித்தார்.