ஈரோடு- கலப்பு திருமணம் செய்தவர் கடத்தல்- துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை!

 

ஈரோடு- கலப்பு திருமணம் செய்தவர் கடத்தல்- துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை!

ஈரோடு

கலப்பு திருமணம் செய்தவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஈரோடு மாவட்ட காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு கடத்தப்பட்டவரை மீட்டது.

கரூர் மாவட்டம், நொய்யல் வெள்ளியம் பாளையம் , செல்வநகரைச் சேர்ந்தவர் காயத்ரி (22) அருந்ததிய சமூகத்தை சேர்ந்த இவரை, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கொடுமுடி அருகில் ஆட்டுக்காரன்புதூர் சதீஸ்குமார் ( 25) காதலித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஈரோடு- கலப்பு திருமணம் செய்தவர் கடத்தல்- துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை!

சதீஸ்குமார் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பெற்றோருக்கு தெரியாமல் 4 வருடங்களாக காயத்ரியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சதீஸ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரியின் சாதி தெரிந்துள்ளது. இதையடுத்து காயத்ரியை மிரட்டிய அவர்கள், அவரையும் குழந்தையையும் கொன்று விடுவதாக கூறியதுடன், சதீஸ்குமாரையும் கடத்திச் சென்றனர்.

ஈரோடு- கலப்பு திருமணம் செய்தவர் கடத்தல்- துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை!

கடந்த 10 நாட்களாக சதீஸ்குமாரை காணவில்லை என்பதுடன், அவரது செல்போன் சுவிட் ஆப் ஆணதால், கடந்த வாரத்தில், தனது கணவரை மீட்கக் கோரி காயத்திரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்த போலீசார், சதீஸ்குமாரை மீட்டு மலையம்பாளையம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து, சுமூகமாக பேசி அறிவுரை வழங்கினார். அதன்படி சதீஸ்குமார் தனது மனைவி குழந்தையும் சேர்த்து வாழ்ந்து கொள்வதாக கூறி அழைத்து சென்றார்.
இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறைக்கு காயத்திரி கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.