ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது…. சிசிடிவி கேமராவால் கண்காணிக்கும் ஈரோடு காவல்துறை

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது…. சிசிடிவி கேமராவால் கண்காணிக்கும் ஈரோடு காவல்துறை

ஈரோடு

ஈரோட்டில் தீபாவளியை முன்னிட்டு குற்றச்செயல்களை நடைபெறுவதை தடுக்கும் விதமாக, காவல்துறை சார்பில் நகரின் முக்கிய வீதிகளில் 15 சிசிடிவி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் ஈரோடு மாநகரின் முக்கிய கடைவீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பூங்கா மணிக்கூண்டு, ஆர்.கே.வி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது…. சிசிடிவி கேமராவால் கண்காணிக்கும் ஈரோடு காவல்துறை

இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக, மாவட்ட போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன்படி முக்கிய கடைவீதிகளில் ஏற்கனவே உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருவதுடன், மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது…. சிசிடிவி கேமராவால் கண்காணிக்கும் ஈரோடு காவல்துறை

இதேபோன்று ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு உட்பட 3 இடங்களில் ராட்சத டிஜிட்டல் போர்டுகள் வைத்து, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர முக்கிய கடைவீதிகளில் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறைகள் மூலம் துல்லியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். அத்துடன் பேருந்துகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குற்றப்பிரிவு போலீசார் 12 பேர் மாறுவேடங்களில் பேருந்துகளில் கண்காணித்து வருகின்றனர