கோபி அருகே போலி மருத்துவர் கைது!

 

கோபி அருகே போலி மருத்துவர் கைது!

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மருத்துவம் படிக்கமால் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி கரட்டுப்பாளையம் ரோடு காசிபாளையத்தில் நாகராஜ் என்பவர், தனது வீட்டில் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத் துறையினருக்கு புகார் வந்தது. அதன் பேரில், காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யசோதா பிரியா தலைமையில் கடத்தூர் போலீசார் நேற்று முன்தினம் நாகராஜ்(58) வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோபி அருகே போலி மருத்துவர் கைது!

அப்போது, நாகராஜ் எம்.பி.பி.எஸ் படிக்காமலும், மருத்துவ சான்று ஏதுவும் இல்லாமல் மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. மேலும், மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தூர் போலீசார் நாகராஜ் மீது மோசடி, மருத்துவ கவுன்சில் சட்டத்தின் படி வழக்கு பதிந்து கைதுசெய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரிடமிருந்து 180 காய்ச்சல் மாத்திரைகள், ஊசி மருந்துகள், மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட ரசீது போன்றவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். நாகராஜ்க்கு மருந்துகள் வழங்கிய முகவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.